ஹோமம்
ஹோமம் என்பது மகரிசிகளாலும், சித்தர்களாலும் அவர்களது ஞானதிஸ்டியினால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த யாகமானது எதற்கு ஆரம்பிக்கபடுகிறது என்றால் ஒருவருடைய வாழ்கையில் குடும்ப சிக்கல், தொழில் பிரச்சனை, கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள், காதல் சிக்கல், இல்லற வாழ்கையில் சிக்கல்கள், ஒரு மனிதனுக்கு தன் பிறப்புக்கும் இறப்புக்கும் மத்தியில் நடக்கக்கூடிய சில இன்ப துன்பங்கள், அந்த துன்பத்தில் இருந்து விடுபட்டு நல்வழிகாட்டி இறைவனுடைய அனுகிரகத்தின் மூலமாக ,கர்மாக்களை நீக்குவதற்காகத்தான் யாகம் நடத்தப்படுகிறது. அதவாது ஜாதகத்தில் உச்சமற்ற நிறைய கிரகங்கள் இருந்தாலும் ஜாதகத்தில் கர்ம இல்லாமல் இருந்தால் தான் வாழ்க்கை வளமுடன் இருக்கும். அவ்வாறு வாழ்க்கை வளமுடன் இருக்க இந்த யாகம் நடத்தப்படுகிறது. யாகமானது அக்னி வேள்விகள் மூலமாக யாக குண்டங்கள் அமைத்து 9 வகையான பாசனத்தின் மூலமாக இந்த சப்தரிசிகள் சார்ந்த, சித்தர்கள் சார்ந்த பிராமின்கள் மூலமாக சர்வ சித்தி அடைந்த மந்திர உபதேசங்கள் கற்று உணர்ந்தவர்களால் மட்டுமே இந்த யாகம் நடத்த முடியும். இந்த யாகம் செய்ய செய்ய ஒரு மனிதனுடைய கர்மாக்கள் நீங்கி அவன் வாழ்கையில் இதுநாள் வரை பட்ட கஷ்டங்களில் இருந்து விமோசனம் பெறுவதற்காகத்தான் இந்த யாகம் நடத்துவார்கள். யாகம் நடக்க நடக்க கர்மா விலகி , குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி சந்தோசமாக வாழ்வார்கள்.
அந்தக் காரியங்களைச் செய்வதன் மூலம் அவனுக்கும் நன்மை - அவன் குடும்பத்தாருககுழந்தை பெறுவதற்கு புத்திர காமஸ்டிய யாகம் நடத்துவார்கள் . ஒரு கணவன் மனைவிக்குகிடையே காதல் பிரச்சனைகள் இருந்தால் அதில் இருந்து விடுபட்டு ஒற்றுமையுடன் வாழ்வதற்கு ரதி மன்மதி யாகம் செய்வார்கள்.
ரிக், யஜூர், சாம , அதர்வண நான்கு வேதங்களை கற்றுணர்ந்து பல ஆயிரம் ஆண்டுகள் தவம் இருந்து மருடனுக்காகவே , மானிடன்னுக்காகவே, கலியுகத்தின் மனிதனுக்காகவே தவம் இருந்து சித்த வைத்திய முறைகள், யாக முறைகள் இதை கண்டுபிடித்து கூறினார்கள். சித்தர்கள் மூலமாக சென்றால்தான் அந்த யாகத்தின் தவ வலிமை , மந்திர உச்சரிப்பு பலன் வாய்ந்ததாக மாறி தான் வாழ்கையில் வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும்.
யாகத்தில் சித்தர்கள் யாகம், மனிதர்கள் யாகம் என வேறுபட்ட யாகங்கள் உள்ளது. அதில் சித்தர்கள் யாகம் தான் வாழ்கையில் வெற்றி பலனை அளிக்கும்.
சுதர்சனா ஹோமம் என்பது அதர்மத்தை அளித்து, தர்மத்தை வெல்வதற்காக சிவபெருமான் மஹா விஸ்ணுவிடம் சுதர்ச சக்கரத்தை கொடுத்தார். சுதர்சனா என்பது சூழ்ச்சி, பொறாமை, கண் திர்ஷ்டி, செய்வினை, மர்ம சூழ்ச்சி , தீட்டு போன்றவை நீக்குவது.
சக்திய நாரயண பூஜை என்பது ஒருவன் தொழிலில் மந்தமான நிலை, முன்னேற முடியாத நிலை, தாழ்வு மனப்பான்மை, தொழிலில் கடன் பிரசனைகள் போன்ற பிரசனைகளை நீக்கி அசாத்தியமான முறையில் அதிக பணம் சம்பாதிப்பதற்க்கு இந்த பூஜையானது செய்யப்படுகிறது.
தன்வந்திரி யாகம்
தன்வந்திரி யாகம் என்பது சஞ்சீவி மூலிகையினால் உருவாக்கப்பட்டது. அதவாது தேவலோகத்தில் பாற்கடலை கடையும் போது தேன் அமிர்தம் உருவானது. அங்கு தன் மாநிடரை காப்பதற்கும், உயிரினங்களிடமிருதும், விஷ பூச்சிகளிடமிருந்தும், வியாதிகளிடமிருந்தும் காப்பதற்காக அந்த தன்வந்திரி பகவான் அமிர்த கலசத்துடன் எழுந்து வந்தார். எனவே தான் ஒருவர் படுக்கையில் இருந்தால் கூட தன்வந்திரி பகவான் யாகம் செய்வதன் மூலாமகவும், தன்வந்திரி பகவானை வணங்குவதன் மூலமாகவும், மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமாகவும் வந்த வினை விலகி போகும். இதன் மூலம் வந்த வினை நீங்கி, நலமாக செல்வ சிறப்பான முறையில் ஆயுள் தீர்க்கத்துடன் வாழ்வார்.
மஹாலட்சுமி பூஜை
மஹாலட்சுமி பூஜை என்பது ஒருவன் வாழ்கையில் உழைத்துக்கொண்டு இருக்கிறான் ஆனால் ஒரு பொன், பொருள் கூட அவனால் சேர்த்து வைக்க முடியாது, கோடி கோடியாக சம்பாதித்து பல பேருக்கு ஊதியம் அழிப்பான், ஆனால் வீட்டில் பணம் இருக்காது. இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க மஹாலட்சுமி யோகம் செய்யப்படுகிறது. ஒருவன் மஹாலட்சுமி யோகம் செய்வதன் மூலம் பொன் , பொருள் செல்வாக்குகளை பெற்று சிறப்புடன் வாழ்வான்.
சித்தர் பூஜை
சித்தர் பூஜை என்பது பௌர்ணமி பூஜை ஆகும். வாழ்கையில் சில சங்கடங்கள், வாழ்கையில் முன்னேற முடியாமல் இருபவர்கள் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சித்தர் பூஜையில் கலந்து கொண்டு சர்வ சக்திகள் படைத்த அஷ்டமா சக்திகளின் அருள் பெற்று வாழ்கையில் ஏற்பட்ட தடைகள் நீங்கி சித்தர்களின் ஆசீர்வாதம் மூலமாக மோட்சங்கள் பெற்று கிடைக்காத செல்வங்கள் , அதிஷ்டங்கள் , குறை இல்லாத வாழ்க்கை நிறைவான சம்பாத்தியம் பெற்று நீடூடி வாழ்வார்.