கர்ம மார்க்கம்
கர்ம என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்து வாழ்வதற்காக, இன்னதைச் செய், இன்னதைச் செய்யாதே என்று வேத சாஸ்திரங்களில் எவை சொல்லப்பட்டிருக்கின்றனவோ அது தான் கர்மா, உதாரணமாக ஹிந்து சமயத்திலுள்ள ஒவ்வொரு வகுப்பாருக்கும் - ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பல காரியங்கள் அவனுடைய நன்மைக்காகவும் அவனுடைய குடும்ப நன்மைக்காகவும் - கிராம தேச உலக நன்மைக்காகவும் விதிக்கப்பட்டிருக்கின்றன.
அந்தக் காரியங்களைச் செய்வதன் மூலம் அவனுக்கும் நன்மை - அவன் குடும்பத்தாருக்கும் நன்மை - கிராம - தேச உலகத்திற்கும் நன்மை ! இவைகளை அவன் சரியாக செய்யாவிட்டாலும் - தவறாகக் செய்தாலும் - செய்யாமல் விட்டு விட்டாலும் - விரோதமாகச் செய்தாலும், அதனால் அவனுக்கும் கஷ்டம், அவன் குடும்பத்திற்கும் கஷ்டம், கிராம - தேச உலகத்திற்கும் ஆண்டவன் பொதுவான காரணமாக இருந்து உலகைக் காத்து வந்தாலும் உலகத்திலுள்ள மக்களுடைய சுக துக்கங்களுக்கு காரணம் அவரவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் சரிவரச் செய்யாமலோ – விட்டு விட்டோ அதற்கு விரோதமாக செய்வதோதான்.
-வேத சாஸ்திரம்
ஓடியிட்ட பிச்சையும், உவந்து செய்த தர்மமும் சாடிவிட்ட குதிரைபோல் தர்மம் நாடி வந்து காக்குமே!
- சித்தர் வாக்கு